உள்ளூர் செய்திகள்

தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய விவசாய பொருட்கள்

Published On 2022-09-08 15:15 IST   |   Update On 2022-09-08 15:15:00 IST
  • இடுபொருட்கள் 40 சதவீதம் மானியத்துடன் வழங்கப்பட உள்ளன.
  • தேனீ பெட்டிகள் மற்றும் தேன் பிரித்தெடுக்கும் கருவிகள் ஆகியவை 40 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளன.

தென்காசி:

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் 2022- 23 -ம் ஆண்டு தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டமானது. மத்திய- மாநில நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் பரப்பு விரிவாக்க இனத்தின் கீழ் வீரிய ஒட்டு காய்கறிகளான கத்தரி, மிளகாய் மற்றும் தக்காளி குழித்தட்டு நாற்றுகள் அரசு தோட்டக்கலை பண்ணையில் தரமான முறையில் உற்பத்தி செய்யப்பட்டு ஹெக்டேர் ஒன்றுக்கு 10,000 நாற்றுகள் மற்றும் இடுபொருட்கள் சேர்த்து ஒரு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலும் பழபயிர்களில் கொய்யா அடர்நடவு காண கொய்யா பதியன்கள், திசு வாழைக் கன்றுகள், பப்பாளி செடிகள், எலுமிச்சை பதியன்கள், நெல்லி செடிகள் ஆகியவையும் இதற்கான இடுபொருட்கள் 40 சதவீதம் மானியத்துடன் வழங்கப்பட உள்ளன.மேலும் உதிரி மலர்கள் மல்லிகை, செண்டுமல்லி, நறுமண பயிர்கள் கிழங்கு வகை நறுமணப் பயிர்கள் (இஞ்சி) 40சதவீத மானியத்தில் விதைக்க இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளன.

பயிர்களில் நீர் மற்றும் கல மேலாண்மைக்கான நிலப்போர்வை கள் 50 சதவீத மானியத்திலும்,மண்புழு உரம் தயாரிக்க தேவைப்படும் நிரந்தர மண்புழு உர படுக்கை கட்டமைக்க பின்னேற்பு மானியமாக 50சதவீதம் வழங்கப்படும். மகரந்த சேர்க்கையை ஊக்குவித்து மகசூலை அதிகரிக்க தேனீ வளர்ப்புக்கு தேவையான தேனீக்கள்,தேனீ பெட்டிகள் மற்றும் தேன் பிரித்தெடுக்கும் கருவிகள் ஆகியவை 40 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளன.

பண்ணை இயந்திரங்கள் என மினி டிராக்டர் 20 குதிரைத்திறன் குறைவாக மற்றும் பவர்டிரில்லர் 8 குதிரை திறனுக்கு குறைவாக 40 சதவிகித பின்னேற்பு மானியத்தில் வழங்கப்பட உள்ளன.

மேலும் வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் குறைந்த விலையிலான வெங்காய சேமிப்பு கிடங்கு 50 சதவீத பின்னேற்பு மானியத்திலும் 87,500 மற்றும் விவசாயிகள் காய்கறிகள் விற்பனைக்கு பயன்படுத்தும் வகையில் நகரும் காய் மற்றும் கனிகள், வண்டிகள் 50சதவீதம் பின்னேற்பு மானியத்திலும் வழங்கப்பட உள்ளன. மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகளுக்கு உரிய ஆவணங்களான பட்டா நகல், ஆதார் அட்டை நகல் குடும்ப அட்டை பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 2 மற்றும் அடங்கல் உள்ளிட்டவற்றை சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம். மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் இந்த ஆண்டு 58 பஞ்சாயத்து கிராமங்கள் அரசாங்கத்தால் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

தேர்வு செய்யப்பட்ட இந்த பஞ்சாயத்து கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 80 சதவிகித இலக்கீடு கிராமங்களில் செயல்படுத்தப்படும் என்றும் மேற்கூறிய அனைத்து திட்டங்களும் 80சதவீதம் பொதுப்பிரிவு விவசாயிகளுக்கும், 20சதவீதம் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு வழங்க ப்படும்.விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 30சதவீதம் திட்ட இனங்கள் பெண்களுக்கு வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு tnhorticulture.tn. gov. in. என்ற தோட்டக்கலைத்துறை இணையதளத்தின் வாயிலாக பதிவு செய்திட வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News