உள்ளூர் செய்திகள்

விழாவில் புனித சவேரியார் சொரூப கப்பல் சப்பரபவனி நடந்த போது எடுத்த படம்.

ஆறுமுகநேரியில் புனித சவேரியார் சொரூப கப்பல் சப்பர பவனி

Published On 2022-12-04 09:15 GMT   |   Update On 2022-12-04 09:15 GMT
  • மடத்துவிளை புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது.
  • நேற்று காலை திருவிழா சிறப்பு திருப்பலி, புதுநன்மை வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி மடத்துவிளை புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது.

விழா நாட்களில் தினசரி திருப்பலி, மறையுறை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடந்தன. விழாவின் ஒவ்வொரு நாளும் குழந்தைகள் தினம், இளையோர் தினம், திருமணம் ஆனவர்கள் தினம், முதியோர் தினம், பக்த சபையார் அன்பியங்கள் தினம், தொழிலாளர்கள் தினம், ஒப்புரவு தினம், ஆலய அர்ச்சிப்பு தினம், பங்கு மக்கள் தினம் என்று கொண்டாடப்பட்டது.

10- வது நாளான நேற்று காலையில் திருவிழா சிறப்பு திருப்பலி மற்றும் புதுநன்மை வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் மணப்பாடு மறை மாவட்ட முதன்மை குரு ஜான் செல்வம், சேர்ந்தபூமங்கலம் பங்குதந்தை செல்வன், அடைக்கலாபுரம் பங்குத்தந்தை பீட்டர் பால் ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து மாலையில் புனித சவேரியார் சொரூப கப்பல் சப்பரபவனி தொடங்கியது.

நிகழ்ச்சியில் ஆறுமுகநேரி பங்கு தந்தை அலாசியஸ் அடிகளார், மடத்துவிளை ஊர்நல கமிட்டி தலைவர் செல்வம் உள்பட திரளா னோர் கலந்து கொண்டனர். சப்பரபவனி மெயின் பஜார் வழியாக சண்முகபுரம் புனித அன்னம்மாள் ஆலயத்திற்கு சென்றது. அங்கு சிறப்பு வழிபாடு முடிந்தபின் மீண்டும் சப்பரபவனி தொடங்கி புனித சவேரியார் ஆலயம் வந்தடைந்தது.

நிறைவு நிகழ்ச்சியாக இன்று காலையில் நன்றி திருப்பலி மற்றும் கொடியிறக்கம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து மதியம் அசனம் நடந்தது.

விழாவிற்கான ஏற்பாடு களை மடத்துவிளை ஊர்நல கமிட்டியினர், ஆறுமுகநேரி பரதர் சமுதாய கமிட்டி தலைவர் செல்வி உள்பட பலர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News