உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்ட காட்சி.

உடன்குடி அரசு நூலகத்தில் மாணவர்களின் தூய்மை பணி

Published On 2023-01-17 13:50 IST   |   Update On 2023-01-17 13:50:00 IST
  • உடன்குடி அரசு கிளை நூலகத்தை சுற்றி ஏராளமான காட்டு செடிகள் வளர்ந்து கிடந்தன.
  • நூலகம் முழுவதும் இருந்த புல்,புதர்களை மாணவர்கள் அகற்றினர்.

உடன்குடி:

உடன்குடி பஸ் நிலையம் அருகில் உள்ள அரசுகிளை நூலகத்தை சுற்றி ஏராளமான காட்டு செடிகள் வளர்ந்துகிடந்தன.இதனால் நூலகத்திற்கு புத்தகம் படிக்க வரும் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது.

இதையடுத்து கிறிஸ்டியா நகரம் றி.டி.றி.ஏ பள்ளி மாணவர்கள் விளையாட்டு ஆசிரியர் கிருபாகரன் மற்றும் நூலகர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலைமையில் கிளை நூலகம் முழுவதும் உள்ள புல், புதர்கள் அகற்றப்பட்டது. நூலகம் உள்ளேயும் வெளியேயும் அனைத்து பகுதிகளிலும் தூய்மை செய்யபட்டது. பள்ளிமாணவர்களின் செயலுக்கு ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பாராட்டும், நன்றியையும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News