உள்ளூர் செய்திகள்
கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.
கம்பம் அருகே ஆட்டுகிடாவை திருடி இறைச்சியாக விற்பனை - 6 பேர் கைது
- வீட்டில் கட்டியிருந்த ஆட்டுகிடாவை கடந்த மார்ச் 25-ந்தேதி காணவில்லை.
- ஆட்டுகிடாவை அறுத்து இறைச்சியாக விற்பனை செய்தனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் கருநாக்கமுத்தன்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் மருதுபாண்டியன்(40). இவர் ஆட்டுகிடாவை வளர்த்து வந்துள்ளார். இந்தநிலையில் வீட்டில் கட்டியிருந்த ஆட்டுகிடாவை கடந்த மார்ச் 25-ந்தேதி காணவில்லை. இதுதொடர்பாக இவர் கூடலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணி வழக்குபதிவு செய்து சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் ஆய்வு செய்தார். அதன்பேரில் தமிழன், விஜய், ஜெயபிரகாஷ் மற்றும் 2 சிறுவர்களை கைது செய்தார். மேலும் ஆட்டுகிடாவை அறுத்து இறைச்சியாக விற்பனை செய்த அண்ணா மலையை யும் கைது செய்தார்.