உள்ளூர் செய்திகள்

பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

ஆலடி அருணா நர்சிங் கல்லூரியில் மாநில அளவிலான சதுரங்க போட்டி- வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்.பி. சாம்சன் பரிசு வழங்கினார்

Published On 2023-07-11 09:06 GMT   |   Update On 2023-07-11 09:06 GMT
  • போட்டியில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.
  • தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் எட்மண்ட் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

தென்காசி:

ஆலங்குளம் அருகே உள்ள ஆலடி அருணா லிபரல் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிலான சதுரங்க போட்டி ஆலடி அருணா அறக்கட்டளை சார்பில் நடந்தது.

பரிசளிப்பு விழா

இதில் திருச்சி, மதுரை, கோவில்பட்டி, தூத்துக்குடி உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.

கல்லூரி நிர்வாக இயக்குனரும், தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி தலைவருமான டாக்டர். பூங்கோதை ஆலடி அருணா தலைமை தாங்கினார். கடையநல்லூர் பிரின்ஸ் மருத்துவமனை டாக்டர் சஞ்சீவி, ஆலங்குளம் டாக்டர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பாப்புலர் செல்லத்துரை வாழ்த்தி பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் எட்மண்ட் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் கீழப்பாவூர் ஒன்றிய முன்னாள் தி.மு.க. செயலாளர் செல்லப்பா, முன்னாள் தி.மு.க. ஒன்றிய கலை இலக்கிய அணி அமைப்பாளர் மாஞ்சோலை துரை, இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவக்குமார், பஞ்சு அருணாச்சலம், ஜெபராஜன், ரஞ்சித், மணிகண்டன், காவலாகுறிச்சி மகேஷ் பாண்டியன் மற்றும் ஆசிரியர்கள் ஜான்சுபா, ஆறுமுக செல்வி, கவுசல்யா அனு, இந்துராணி, ஜோன் திரிஷா, ராஜேஷ், ஜெயசீலின், ஜெகா உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி முதல்வர் முத்தமிழன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News