உள்ளூர் செய்திகள்

மலர்மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சீரடி சாய்பாபா.

சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை, வழிபாடு

Update: 2022-08-19 11:15 GMT
  • வாழப்பாடியில் ஓம் அமர்ணா மலைக்குன்று அடிவாரத்தில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோவிலில், வாராந்திர சிறப்பு பூஜை நடைபெற்றது.
  • வழிபாட்டில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் சமபந்தி அன்னதானம் வழங்கப்பட்டது.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் ஓம் அமர்ணா மலைக்குன்று அடிவாரத்தில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோவிலில், வாராந்திர சிறப்பு பூஜை வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த வழிபாட்டில் மலர்மாலை அலங்காரத்தில் சீரடி சாய்பாபா பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிபாட்டில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் சமபந்தி அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி மாதேஸ்வரி ஜவஹர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News