உள்ளூர் செய்திகள்

சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.

ஆழ்வார்கற்குளத்தில் தேசிய சித்த மருத்துவ தின சிறப்பு மருத்துவ முகாம்

Published On 2023-01-08 08:05 GMT   |   Update On 2023-01-08 08:05 GMT
  • ஆழ்வார்கற்குளம் கிராமத்தில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
  • சித்த மருத்துவ முகாமை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கவிதா புஷ்பம் தலைமை தாங்கி நடத்தினார்.

செய்துங்கநல்லூர்:

கிள்ளிகுளம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நாட்டு நலப்பணித் திட்ட அமைப்பின் சார்பில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்கற்குளம் கிராமத்தில் கடந்த 3-ந்தேதி முதல் நாளை வரை நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமின் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அமைப்பு, சித்த மருத்துவ பிரிவு ஆரம்ப சுகாதார நிலையம், வல்லநாடு இணைந்து ஆழ்வார்கற்குளத்தில் பொதுமக்களுக்கு நடத்தும் சிறப்பு சித்த மருத்துவ முகாம் நடந்தது.

இதனை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கவிதா புஷ்பம் தலைமை தாங்கி நடத்தினார். இதில் சித்த மருத்துவ அலுவலர் செல்வகுமார், சித்த மருத்துவத்தின் தொன்மை மற்றும் சிறப்பினைப் பற்றி விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். மேலும், மருந்தாளுனர் வெங்கடேசன் பொதுமக்களுக்கு இலவசமாக மருந்துகளை வழங்கினார். முடிவில் நிலவேம்பு குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News