உள்ளூர் செய்திகள்

தென் தமிழக அளவில் நடைபெற்ற யோகா-ஸ்கேட்டிங் போட்டியில் பழனி நாடார்

எம்.எல்.ஏ. நடுவர்களுக்கு பரிசு வழங்கிய காட்சி.

தோரணமலையில் தென்தமிழக அளவிலான யோகா, ஸ்கேட்டிங் போட்டி

Published On 2023-01-08 08:01 GMT   |   Update On 2023-01-08 08:01 GMT
  • போட்டியில் 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
  • சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் பரிசு வழங்கி பாராட்டினார்.

கடையம்:

தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை சி.ஜே.திருமண மண்டபத்தில், லட்சியம் அசோசியேசன் சார்பில், தென்தமிழக அளவிலான யோகா மற்றும் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.

போட்டிகளுக்கு சி.ஜே.மருத்துவமனை மருத்து வர்கள் தர்மராஜ், அன்புமலர் தர்மராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். தட்சணமாற நாடார் சங்கத்தலைவர் ஆர்.கே. காளிதாசன், சென்னை குளோபல் லிமிடெட் செல்லத்துரைசிங், தோரணமலை முருகன் கோவில் பரம்பரை அறங்கா வலர் செண்பகராமன் முன்னிலை வகித்தனர். வி.கே.முத்தையா, சரஸ்வதி, வி.என்.ரெசவு முகைதீன், மாலிக் பேகம் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். லட்சியம் அசோசியேசன் தலைவர் பாலகணேசன் வரவேற்றார்.

போட்டியில் 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் பரிசு வழங்கி பாராட்டினார். பாரதிதாசன் பல்கலைக்கழக இணை ஒருங்கிணைப்பாளர் வில்சன்அருளானந்தன், தேசிய சட்ட உரிமைகள் கழக மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆனந்தகுமார், மதுரை ஜீவன் மூர்த்தி, ராம நீராளன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

நடுவர்களாக ஜெயபிரதாப்சிங், கார்த்திகா பார்த்திபன், கனகராஜ், சுரேஷ், சரவணன், அனுஷீலா ஆகியோர் பணியாற்றினர்.

இதில் கிருஷ்ணன், கயற்கண்ணி, கண்ணன், மோகன், ரவிக்குமார், பிரபு, நாராயணசிங்க், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் கவிதா பால கணேசன் நன்றி கூறினார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.

Tags:    

Similar News