உள்ளூர் செய்திகள்
சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 4 பேருக்கு விருது
- மாவட்ட கலெக்டர் சரயு சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றி வரும் 4 பேருக்கு விருது வழங்கினார்.
- விமல் ரவிக்குமார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜேம்ஸ் , ஆனந்த குமார்,ஜெயம்மா ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகாவில் சுதந்திர தின விழாவை யொட்டி மாவட்ட கலெக்டர் சரயு சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றி வரும் 4 பேருக்கு விருது வழங்கினார்.
விருதானது வட்டார வளர்ச்சிஅலுவலர் (கி.ஊ) விமல் ரவிக்குமார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜேம்ஸ் , ஆனந்த குமார்,ஜெயம்மா ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், அலுவலர்கள் ஊழியர்கள் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.