உள்ளூர் செய்திகள்

25-ந் தேதி சூரிய கிரகணம்-மருதமலை, ஈச்சனாரி, மாசாணியம்மன் கோவில் நடை அடைப்பு

Published On 2022-10-20 15:22 IST   |   Update On 2022-10-20 15:22:00 IST
  • சூரிய கிரகண நேரத்தில் கோவில்களின் நடை அடைக்கப்படுவது வழக்கம்.
  • கோவையில் உள்ள முக்கிய கோவில்களின் நடைகள் அடைக்கப்படுகிறது.

கோவை,

நடப்பாண்டின் கடைசி சூரிய கிரகணம் வருகிற 25-ந் தேதி வருகிறது. அன்று மாலை 5.21 மணியில் இருந்து மாலை 6.23 மணி வரை சூரிய கிரகணம் நீடிக்கிறது.

சூரிய கிரகண நேரத்தில் கோவில்களின் நடை அடைக்கப்படுவது வழக்கம். அதன்படி கோவையில் உள்ள முக்கிய கோவில்களின் நடைகள் அடைக்கப்படுகிறது.

கோவை வடவள்ளி அருகே மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். இந்த நிலையில் தீபாவளிக்கு மறுநாள் 25-ந் தேதி சூரிய கிரகணம் வருகிறது.

இதனையொட்டி அன்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை மருதமலை முருகன் கோவில் நடை அடைக்கப்படுகிறது. அப்போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை. சூரிய கிரகணம் முடிந்தவுடன் மறுநாள் காலை 6 மணி முதல் வழக்கம்போல் கோவில் நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். அன்று பக்தர்கள் வழக் கம்போல் வழிபாட்டிற்கு அனுமதிக் கப்படுவர்.

பொள் ளாச்சி மாசாணி யம்மன் கோவிலுக்கு உள்ளூர் வெளியூர் பக்த ர்கள் என தினமும் ஏராள மானோர் வந்து சாமி தரிசனம் செய்து ெசல் கின்றனர். சூரிய கிரகண த்தையொட்டி ஆனை மலை மாசாணி யம்மன் கோவில் நடை பிற்பகல் 3 மணி முதல் அடைக் கப்படுகிறது. அந்த நேரத் தில் பக்தர் களுக்கு சாமி தரிசனம் செய்வ தற்கும் அனுமதி கிடையாது. மறுநாள் வழக்கம ்போல காலை 6 மணி முதல் நடை திறந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனும திக்க ப்படுவார்கள்.

ஈச்சனாரி விநாயகர் கோவில் நடை மாலை 3 முதல் இரவு 7 மணி வரை அடைக்கப்படும். இந்த சமயத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இரவு 7 மணிக்கு பின் வழிபாடுகள் நடைபெறும். அப்போது பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News