உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சி சாலையில் மண்களை சுத்தம் செய்யும் வாகனத்தை அமைச்சர் எ.வ. வேலு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சியில் மண்களை சுத்தம் செய்யும் வாகனம் அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்

Published On 2023-06-26 14:33 IST   |   Update On 2023-06-26 14:33:00 IST
  • புதிய மண்கள் சுத்தம் செய்யும் வாகனம் வாங்கப்பட்டது.
  • நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி நகராட்சியின் சார்பில் நமக்கு நாமே திட்டம் 2022-23-ன்கீழ் பொதுமக்களின் பங்களிப்பாக, கள்ளக்குறிச்சி நகர்மன்ற தலைவர் சுப்ராயலு மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில் ரூ.28.37 லட்சமும், அரசு பங்களிப்பாக ரூ.56.74 லட்சமும் என மொத்தம் ரூ.85.11 இலட்சம் மதிப்பீட்டில் புதிய மண்கள் சுத்தம் செய்யும் வாகனம் வாங்கப்பட்டது.

இதையொட்டி கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் கள்ளக்குறிச்சி நகராட்சியின் சார்பில் சாலைகளில் உள்ள மண்களை சுத்தம் செய்யும் வாகனத்தினை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில், பொதுப்பணிகள் (கட்டிடங்கள்), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த வாகனத்தின் மூலம் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட பிரதான சாலைகளில் உள்ள மண்கள் சுத்தம் செய்யப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி நகர்மன்றத் தலைவர் சுப்ராயலு, கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் குமரன், கள்ளக்குறிச்சி நகர்மன்ற துணை தலைவர், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பொறியாளர் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News