உள்ளூர் செய்திகள்

பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் குவித்து வைக்கப்பட்டுள்ள சின்னவெங்காய மூட்டைகள்.

பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் சின்னவெங்காயத்தின் விலை உயர்வு

Published On 2023-10-27 14:53 IST   |   Update On 2023-10-27 14:53:00 IST
  • விளைச்சல் குறைவின் காரணமாக பல்லாரி, சின்னவெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
  • பல்லாரியின் விலை ஒரு கிலோ ரூ.35 லிருந்து 65 ஆக உயர்ந்துள்ளது.

தென்காசி:

பாவூர்சத்தி ரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் தினசரி மார்க்கெட்டில் பல்வேறு காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் விளைச்சல் குறைவின் காரணமாக பல்லாரி, சின்னவெங்காயம் மற்றும் மாங்காய் உள்ளிட்டவையின் விலையானது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

ரூ.60-க்கு ஒரு கிலோ சின்னவெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.80 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தென்காசி மாவட்டத்தில் இலத்தூர் பகுதிகளில் இருந்து வரும் சின்ன வெங்காயமே அதிகம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ள னர்.

மேலும் பல்லாரி விளைச்சலானது தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 15 சதவீதம் மட்டுமே இருந்ததாகவும், அண்டை மாநிலமான கர்நாடகா விலும் 40 சதவீத விளைச்சல் இருந்ததால் அனைத்து விவசாயிகளும் மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள சந்தையில் இருந்து கொள்முதல் செய்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதனால் பல்லாரியின் விலையும் ஒரு கிலோ ரூ.35 லிருந்து 65 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோன்று மாங்காயின் விளைச்சல் மற்றும் வரத்து குறைவின் காரணமாக ஒரு கிலோ ரூ.40 முதல் 50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.78 ஆக உயர்ந்துள்ளது.

வாழை இலை கட்டுகளின் விலையும் ரூ.400 லிருந்து 750 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றமானது தொடர்ந்து இன்னும் ஒரு வாரம் நீடிக்க வாய்ப்புள்ளது எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News