உள்ளூர் செய்திகள்

பாலூட்டும் தாய்மார்களுக்கு பயன் அளிக்கும் சிறுதானியங்கள்

Published On 2023-03-15 09:13 GMT   |   Update On 2023-03-15 09:13 GMT
  • சிறுதானிய பயன்பாடு அவசியம் குறித்து ஒரு நாள் கருத்தரங்கு கோத்தகிரியில் நடந்தது.
  • கேழ்வரகு , வரகு, தினை, சாமை, குதிரைவாலி, கம்பு, சோளம் போன்ற தானியங்களில் அபரிவி தமான சத்துக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அரவேணு,

உலக சிறுதானிய ஆண்டை முன்னிட்டு தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு சார்பில் சிறுதானிய பயன்பாடு அவசியம் குறித்து ஒரு நாள் கருத்தரங்கு கலை நிகழ்ச்சிகள் கோத்தகிரியில் உள்ள தனியார் மண்ட பத்தில் நடந்தது.

கருத்தரங்கில் எதிர்கா லத்தில் உணவும், தண்ணீரும் பற்றாக்குறை ஏற்படும் சூழலிலும் சிறுதானியங்கள் தான் நம்மை பாதுகாக்கும் உணவாகும் என வலியுறுத்தப்பட்டது.

மனிதருக்கு தேவையான சரிவிகித உணவை புஞ்சை தானியங்களான பயிர்கள் மட்டுமே தர முடியும். இதனை உற்பத்தி செய்ய குறைந்த அளவே தண்ணீர் போதுமானது. மேலும் சிறுதானியங்கள் பருவ கால மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தாங்கி வளரும் தன்மை கொண்டதாகும்.

கேழ்வரகு , வரகு, தினை, சாமை, குதிரைவாலி, கம்பு, சோளம் போன்ற தானியங்களில் அபரிவி தமான சத்துக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. பாலூட்டும் தாய்மார்களுக்கு அவசியமான உணவாகும். உடல் நரம்புகளுக்கு சக்தியை அதிகரித்து இதயம் சம்பந்தமான நோய்கள், வாய்ப் புண், வயிற்றுப்புண், புற்றுநோய், இரத்த அழுத்தம் போன்றவைக்கு சிறுதா னியங்கள் நிவாரணியாகவும் விளங்குகிறது.

துரித உணவு மாறிவரும் உணவு பழக்க வழக்கங்கள் காரணமாக உலகத்தில் 50 சதவீதம் குழந்தைகள் இந்தியாவில் ஊட்டச்சத்து குறைவுள்ள குழந்தைகளாக இருப்பதாகவும், 50 சதவீதம் தாய்மை பேறு அடையக்கூடிய வயதில் உள்ள பெண்களில் ரத்த சோகை நோயால் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வறிக்கை கூறுவதாக கருத்தரங்கில் தெரிவிக் கப்பட்டது. விழிப்புணர்வு பேரணியும் நடத்தப்பட்டது.

Tags:    

Similar News