உள்ளூர் செய்திகள்
தமிழரசி எம்.எல்.ஏ. விடம் மக்கள் மனு கொடுத்த காட்சி.
- கால்பிரவு ஊராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி தலைமையில் நடைபெற்றது.
- அனைத்து மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் கால்பிரவு ஊராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மானா
மதுரை எம்.எல்.ஏ. தமிழரசி தலைமையில் நடைபெற்றது .இதில் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, குடும்ப அட்டை, இலவச வேளாண் பொருட்கள் மற்றும் அனைத்து மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.
இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.ஆர்.பி. முருகேசன், ஒன்றியதலைவர்லதா, ஒன்றியகவுன்சிலர்கள். ராதா, அண்ணாதுரை, ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி, தாசில்தார் தமிழரசன் மற்றும் அனைத்து துறைஅரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.