உள்ளூர் செய்திகள்

இலவச தென்னை மரக்கன்றுகள்

Published On 2023-09-08 12:52 IST   |   Update On 2023-09-08 12:52:00 IST
  • கீழடி ஊராட்சியில் இலவச தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
  • முடிவில் விழா ஒருங்கிணைப்பாளர் கருணாகர சேதுபதி நன்றி கூறினார்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் கீழடிஊராட்சியில் பாண்டிய மண்டல பேரமைப்பு மற்றும் வைகை உழவர் பிரிவு பசுமை பூமி இணைந்து நடத்திய மூன்றாம் ஆண்டு விதைதிருவிழா நடந்தது. சிவகங்கை அரசுமருத்துவ கல்லூரி டாக்டர் சரோஜினி தொடங்கி வைத்தார். கீழடி ஊராட்சி தலைவர் வெங்கிட சுப்பிரமணியன் வரவேற்றார். அருட்தந்தை ஜெகத்கஸ்பர், சூழலியல் எழுத்தாளர் நக்கீரன், தாளான்மை ஆசிரியர் பாமயன் ஆகியோர் இயற்கை பாதுகாப்பு பற்றியும் பாரம்பரிய நெல் விதைகளை பற்றி பேசினார்கள்.

விழாவில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள், பொதுமக்களுக்கு தென்னை கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது. பாரம்பரிய அரிசி வகைகளில் தயாரான உணவுகள் வழங்கப்பட்டது. பாரம்பரிய நெல் வகைகள், வேளாண் பொருள்கள், இயற்கையான மருத்துவ குணமுடைய தாவரங்கள், சிறுதானிய பொருட்கள் கண்காட்சி நடந்தது. முடிவில் விழா ஒருங்கிணைப்பாளர் கருணாகர சேதுபதி நன்றி கூறினார்.

Tags:    

Similar News