உள்ளூர் செய்திகள்

மாட்டுவண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்து வந்த காளைகள்.

இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

Published On 2023-08-09 08:06 GMT   |   Update On 2023-08-09 08:06 GMT
  • இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
  • வெற்றி பெற்ற மாடுகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது.

தேவகோட்டை

தேவகோட்டை அருகே உள்ள தாழையூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

தாழையூர் கூத்தாடி முத்துபெரியநாயகி கோவிலில் பந்தயம் தொடங்கியது. வெங்களூர் சாலையில் மாடுகள் சீறிப்பாய்ந்து சென்றன. பெரியமாடு, சின்ன மாடு என 2 பிரிவுகளாக போட்டி நடந்தது. பெரியமாடுகளுக்கு 8 மைல் தூரமும், சின்ன மாட்டிற்க்கு 6 மைல் தூரமும் நிர்ணயிக்கப் பட்டது.

சிவகங்கை, ராமநாத புரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, தேனி போன்ற மாவட்டத்தில் இருந்து 25 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாடு பிரிவில் சிவகங்கை மாவட்டம் காணிச்சாவூரணி மணி அம்பலம் மாடு முதல் பரிசு பெற்றது.

2-வது நல்லாங்குடி முத்தையா சேர்வை மாடு, 3-வது தேவகோட்டை பிரசாத் மொபைல், 4-வது சாத்தி கோட்டை கருப்பையா சேர்வை மாடுகள் இடம் பெற்றன. சின்ன மாடு பிரிவில் மதுரை மாவட்டம் கொடிக்குளம் மாடு முதலிடம் பெற்றது. தேவகோட்டை பிரசாத் மொபைல், காரைக்குடி கருப்பண சேர்வை, கண்டதேவி மருது பிரதர்ஸ் மாடுகள் அடுத்தடுத்த இடம் பிடித்தன.

வெற்றி பெற்ற மாடுகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News