உள்ளூர் செய்திகள்

ஆரோவில் அருகே பூட்டிய வீட்டில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் திருட்டு

Published On 2023-10-13 08:54 GMT   |   Update On 2023-10-13 08:54 GMT
  • இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மணி மாறனுக்கும், ஆரோவில் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
  • ரூ,50 ஆயிரம் மதிப்பிள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் இரும்பை கிராமம் உள்ளது. இங்குள்ள மாகாளேஸ்வரர் கோவில் வீதியில் வசிப்பவர் மணிமாறன் (வயது 40). தனது குடும்பத்துடன் பங்களாதேஷில் தங்கி வேலை செய்கிறார். இதனால் இங்குள்ள வீட்டை பூட்டிவிட்டு அக்கம் பக்கத்தினரை பார்த்துக் கொள்ள சொல்லி சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலையில் மணிமாறனின் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மணி மாறனுக்கும், ஆரோவில் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமை யிலான போலீசார், வீட்டிற்குள் சென்று சோதனை நடத்தினர். இதில் வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த வெள்ளி பொரு ட்கள், பட்டுப்புடவைகள் திருடப்பட்டிருந்தது.

மேலும், சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுணர்கள், அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், ரூ,50 ஆயிரம் மதிப்பிள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். வானூர், ஆரோவில் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளில் கொள்ளையடிக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்கி றது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.எனவே, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடித்து சிறையில் அடைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News