உள்ளூர் செய்திகள்

சிலம்பம் போட்டியில் கிருஷ்ணகிரி பாரத் பள்ளி மாணவிகள் சாதனை

Published On 2022-11-22 10:17 GMT   |   Update On 2022-11-22 10:17 GMT
  • மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
  • வெற்றிபெற்று மற்ற மாணவ மாணவியர்களுக்கு ஊக்கம் அளித்திட வேண்டும் என கூறினார்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட சிலம்பம் போட்டியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் தக்ஷிதா, தயனிதா என்ற இரு மாணவிகள் முதலிடம் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். இவ்விரு மாணவிகளும் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவியர்களை பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மணி பரிசு வழங்கி பாராட்டி பேசுகையில்:-

நமது தமிழக பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் விளையாடுவதினால் ஏற்படும் நன்மைகளை பற்றி எடுத்துரைத்தார். மேலும் தாங்கள் இருவரும் அழிவின் போக்கில் இருக்கும் சிலம்பம் விளையாட்டை எதிர்வரும் போட்டிகளில் நீங்கள் வெற்றிபெற்று மற்ற மாணவ மாணவியர்களுக்கு ஊக்கம் அளித்திட வேண்டும் என கூறினார். மேலும் வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளியின் தாளாளர் கிருஷ்ணவேணி மணி, செயலர் சந்தோஷ், பள்ளி முதல்வர் விஜயகுமார், துணை முதல்வர் நசீர்பாஷா மற்றும் உடற்கல்வி ஆசிரியர் தமீஸ், ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

Similar News