பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த காட்சி.
நீட் தேர்விற்கு எதிராக கையெழுத்து இயக்கம் இயக்கம்
- கிருஷ்ணகிரியில் நீட் தேர்விற்கு எதிராக கையெழுத்து இயக்கம் தொடங்கியது.
- தலைமை கழக பேச்சாளர் குடியாத்தம் குமரன் கலந்து கொண்டார்.
கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நீட் தேர்விற்கு எதிராக கையெழுத்து இயக்கம் தொடங்கியது.
தி.மு.க., மாநில இளை ஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக் கத்தை அறிவித்தார். அதன் படி, 50 நாட்களில், 50 லட்சம் பேர் கையெ ழுத்து டன் நீட் தேர்வு எதிர்ப்பு குறித்து மனுவை குடியரசுத்த லைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கூறினார்.
அதன்படி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி சார்பில் நேற்று கையெழுத்து இயக்கம் நேற்று கிருஷ்ணகி ரியில் பெங்களூர் சாலை யில் உள்ள வெங்கடேஸ்வரா காம்பளக்ஸ் சுபம் கூட்ட அரங்கில் தொடங்கியது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினேஷ்ராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் மகேந்திரன், சங்கர், சரவ ணன், சங்கர், சத்தியமூர்த்தி, லயோலா ராஜசேகர் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் பங்கேற்று, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து, நீட் தேர்வு விலக்கு குறித்து சிறப்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக தலைமை கழக பேச்சாளர் குடியாத்தம் குமரன் கலந்து கொண்டார். இதில் முன் னாள் எம்.பி.க்கள் சுகவனம், வெற்றிச்செல்வன், மாவட்ட அவைத்தலைவர் தட்ர அள்ளி நாகராஜ், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடே சன், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்த சாமி, சந்திரன், சாவித்திரி கடலரசுமுர்த்தி, மாவட்ட பொருளாளர் கதிரவன், நகர செயலாளர் நவாப், தலைமை செயற்குழு உறுப்பினரும், நகர்மன்ற தலைவருமான பரிதாநவாப், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம் மாணவரணி அமைப்பாளர் ஜெயந்திரன் மருத்துவரணி அமைப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள், அணிகளின் அமைப்பா ளர்கள், துணை அமைப்பா ளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.