உள்ளூர் செய்திகள்

சிவராத்திரி வழிபாடு அய்யம்பாளையம் மாதேஸ்வர சுவாமி கோவிலில் குவியும் பக்தர்கள்

Published On 2023-02-18 07:36 GMT   |   Update On 2023-02-18 07:36 GMT
  • பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது.
  • ஏற்பாடுகளை அய்யம்பாளையம் ஊர் பொதுமக்கள் மற்றும் கதித்தமலை வனம் அமைப்பினர் செய்துள்ளனர்.

ஊத்துக்குளி :

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் அய்யம்பாளையம் செல்லும் வழியில் சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது மாதேஸ்வர சுவாமி கோவில். சுமார் 300 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோவிலில் வாரந்தோறும் திங்கட்கிழமை மற்றும் பிரதோஷ திருநாள் , அமாவாசை ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள், அன்னதானம் நடைபெற்று வருகிறது.

கதித்தமலை குன்றின் ஒரு பகுதியில் அமைந்துள்ள இக்கோவிலின் வலது பக்கத்தில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. திருமண தடையை நீக்கவும், தொழிலில் இடர்பாடுகள் நீக்கவும் பக்தர்கள் மூலவர் மாதேஸ்வர சுவாமியை மண்டியிட்டு வணங்கி தங்களின் கோரிக்கையை மனம் உருகி வேண்டி வருகின்றனர். 

இக்கோவிலில்மகா சிவராத்திரி சிறப்பு பூஜை இன்று இரவு நடக்கிறது.இதைெயாட்டி இரவு 8மணியில் இருந்து 9மணி வரை முதற்கால சிவ பூஜை நடக்கிறது. 10 மணியில் இருந்து 11 மணி வரை 2-ம் கால ருத்ராபிஷேக பூஜை நடக்கிறது. நாளை 19-ந்தேதி அதிகாலை 2மணியில் இருந்து 3மணி வரை 3-ம் கால சிவ பூஜை நடக்கிறது. அதிகாலை 4மணியில் இருந்து 5 மணி வரை 4-ம் பள்ளய மகா பூஜை நடக்கிறது. சிவராத்திரி வழிபாட்டில் பங்கேற்பதற்காக திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது.

இதற்கான ஏற்பாடுகளை அய்யம்பாளையம் ஊர் பொதுமக்கள் மற்றும் கதித்தமலை வனம் அமைப்பினர் செய்துள்ளனர். 

Tags:    

Similar News