உள்ளூர் செய்திகள்

பென்னாகரத்தில் ரூ.9.23 லட்சத்துக்கு எள்ளு ஏலம் போனது

Published On 2023-07-06 15:04 IST   |   Update On 2023-07-06 15:04:00 IST
  • எள்ளு ஏலத்தில் தருமபுரி மற்றும் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 8 வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
  • அதிகபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.12,610 -க்கு விலை போனது. அதேபோல் குறைந்த பட்சமாக ரூ.12,200 க்கும் ஏலம் போனது.

பென்னாகரம்,

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் பென்னா கரம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் மறைமுக எள்ளு ஏலம் நடைபெற்றது.

இதில் பென்னாகரம் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 150 எள்ளு மூட்டைகளை விற்பனைக்குக் கொண்டு வந்தனர்.

ஒழுங்கு முறை விற்பனைக் கூட மேற்பார்வை யாளர்கள் வீரன், சக்திவேல், சீதாராமன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற மறைமுக எள்ளு ஏலத்தில் தருமபுரி மற்றும் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 8 வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் அதிகபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.12,610 -க்கு விலை போனது. அதேபோல் குறைந்த பட்சமாக ரூ.12,200 க்கும் ஏலம் போனது.

மொத்தமாக 7350 கிலோ எடையுள்ள எள்ளு ரூ. 9,23,271 -க்கு ஏலம் நடைபெற்றது. இதில் விவசாயிகளுக்கு உரிய தொகை உடனடியாக வியாபாரிகளிடமிருந்து பெற்று வழங்கப்பட்டது.

Tags:    

Similar News