உள்ளூர் செய்திகள்

அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் காத்திருந்தவர்கள்.

உதவி பொறியாளர் பணிக்கான தேர்வு: தாமதமாக வந்தவர்கள்அனுமதி மறுப்பு

Update: 2022-07-02 12:04 GMT
  • உதவி பொறியாளர் பணிக்கான தேர்வுக்கு 5 நிமிடம் தாமதமாக வந்த 8 பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
  • சேலம் கோட்டை பள்ளியில் ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு தேனி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி மற்றும் சேலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தேர்வு எழுத வந்தனர்.

சேலம்:

தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-3 சார்பில் உதவி பொறியாளர்களுக்கான தேர்வு இன்று நடந்தது. இந்த தேர்வை எழுத சேலத்தில் 4 மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது .

சேலம் கோட்டை பள்ளியில் ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு தேனி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி மற்றும் சேலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தேர்வு எழுத வந்தனர்.

9 மணிக்குள் தேர்வு எழுதுபவர்கள் வர வேண்டும் என்று தேர்வு துறை சார்பில் அறிவுறுத்தபபட்டிருந்தது. ஆனால் கோட்டை பள்ளி தேர்வு மையத்திற்கு 9 மணி 5 நிமிடத்திற்கு 3 பெண்கள் உள்பட 8 பேர் வந்தனர். ஆனால் அவர்களை அதிகாரிகள் தேர்வு எழுத அனுமதிக்க வில்லை.

தங்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று தேர்வு மைய அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் அவர்கள் ஃ கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ள வில்லை. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News