உள்ளூர் செய்திகள்

காயம் அடைந்தவர்களை சந்தித்து எஸ்.பி. நிஷா ஆறுதல் கூறினார்.

தீ விபத்தால் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு எஸ்.பி. நேரில் சென்று ஆறுதல்

Published On 2023-07-30 10:18 GMT   |   Update On 2023-07-30 10:18 GMT
  • கூறைவீடு இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது.
  • மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மடப்புரம் பெரிய சாவடி குளம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணன் (வயது45). கீற்று முடியும் தொழில் செய்யும் இவரது கூறைவீடு இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அருகருகே கூறைவீடு இருந்ததால் 20க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கலைவாணன் வீட்டிலிருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஜெயக்குமார் ஜெய பிரதாபன் , மணிமாறன், ஜெகதீஷ், கருணாநிதி , சுரேஷ், பிரேமா, நடராஜன் உள்ளிட்ட 15 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த ஆக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து முதலுதவி பெற்று 12 பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் கருணாநிதி. சுரேஷ். சரவணன் ஆகிய மூன்று பேர் பேர் பலத்த காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த செம்பனார்கோவில் மற்றும் மயிலாடுதுறை போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதனை அறிந்த மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என்.எஸ் நிஷா சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News