உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் ஆடித்தபசு திருவிழா-அடுத்த மாதம் 21-ந் தேதி தொடங்குகிறது

Published On 2023-06-21 14:20 IST   |   Update On 2023-06-21 14:20:00 IST
  • சிவன், விஷ்ணு இருவரில் யார் பெரியவர் என்ற சர்ச்சை பக்தர்களிடையே ஏற்பட்டது.
  • 9-ம் திருநாளான ஜூலை மாதம் 29-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

சங்கரன்கோவில்:

தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவாலயங்களில் சங்கரன் கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதங்களில் ஆடித்தபசு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆடித்தபசு திருவிழா

முன்னொரு காலத்தில் சிவன், விஷ்ணு இருவரில் யார் பெரியவர் என்ற சர்ச்சை பக்தர்களிடையே ஏற்பட்டது. அப்போது இருவரும் ஒருவரே என்று காட்சி அளிக்க வேண்டி கோமதி அம்பாள் ஒற்றை காலில் தவசு இருந்தார்.

அம்பாளின் வேண்டு கோளை ஏற்று சங்கரலிங்க சுவாமி தனது உடலின் வலதுபுறத்தை சிவனாகவும், இடதுபுறத்தை விஷ்ணுவாகவும் மாற்றி சங்கரநாராயண சுவாமியாக பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

இந்த அரிய நிகழ்வே ஆடித்தபசு திருவிழாவாக ஆண்டுதோறும் கொண் டாடப்பட்டு வருகிறது.

ஜூலை 21-ந்தேதி

இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா அடுத்த மாதம் 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் 9-ம் திருநாளான ஜூலை மாதம் 29-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. 11-ம் திருநாளான (31-ந்தேதி) விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி நிகழ்ச்சி நடக்கிறது.

Tags:    

Similar News