உள்ளூர் செய்திகள்

நகராட்சி கூட்டம் சேர்மன் உமா மகேஸ்வரி தலைமையில் நடந்தபோது எடுத்தபடம்.


சங்கரன்கோவில் நகராட்சி கூட்டம்

Published On 2022-12-03 08:47 GMT   |   Update On 2022-12-03 08:47 GMT
  • நகராட்சி கூட்டத்திற்கு சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார்.
  • கூட்டத்தில் குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் நகராட்சி கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு சேர்மன் உமாமகேஸ்வரிசரவணன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் ஹரிகரன், மேலாளர் மாரியம்மாள், சுகாதார அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பேசிய நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் மருத்துவ மையத்தை திறந்து வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், சங்கரன்கோவிலுக்கு வழங்கிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும், இங்கே வருவதற்கு முயற்சி எடுத்த தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

தொடர்ந்து இந்த கூட்டத்தில் குடிநீர் பிரச்சினை, சங்கரன்கோவிலில் அதிகளவில் சுற்றி தெரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்துவது குறித்தும், நகராட்சி பகுதிகளில் பேவர் பிளாக் சாலைகள் அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் 8-வது வார்டு கவுன்சிலர் சரவணகுமார், மேலாளர் மாரியம்மாளை அவதூறாக பேசியதால் அவரை கூட்ட அரங்கில் இருந்து வெளியேறும்படி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் உத்தரவிட்டார். தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News