உள்ளூர் செய்திகள்
தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
- கிருஷ்ணகிரி அருகே தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இதில் 140 பேர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஊராட்சி ஒன்றியத்தில் 50 ஊராட்சிகள் இருக்கின் றன. இந்த ஊராட்சிகளில் பணி யாற்றும் தூய்மை பணியா ளர்கள் மற்றும் மேல்நிலை குடிநீர் தொட்டி டேங்க் ஆப்ரேட்டர்கள், தூய்மை காவலர்கள் ஆகியோருக்கு கடந்த 3 மாதம் சம்பளம் வழங்கபடவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மேல்நிலை நீர்தேக்க தொட்டி டேங்க் ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் ஆகியோருக்கு 3 மாத சம்பளம் வழங்கா ததை கண்டித்து ஒட்ஷா கூட்டமைப்பு சங்கம் மாநில தலைவர் லட்சுமனன் தலைமையில் தளி ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதில் சுமார் 140 பேர் கலந்து கொண்டனர்.
இதனால அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது,