உள்ளூர் செய்திகள்

தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்.

முறையாக சம்பளம் வழங்ககோரி மயிலாடுதுறையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்

Published On 2022-11-19 09:29 GMT   |   Update On 2022-11-19 09:29 GMT
  • தினம்தோறும் 340 ரூபாய் கணக்கில் சம்பளம் வழங்கப்படும்
  • சாக்கடைகளில் இறங்கி வேலை பார்க்கும் தங்களுக்கு கையுறை, காலுறை உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மயிலாடுதுறை நகராட்சியில் 80 பேர் தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். தனியார் கம்பெனி மூலம் ஒப்பந்த முறையில் பணி செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு மாதம் தோறும் 15 தேதிக்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. தினம்தோறும் 340 ரூபாய் கணக்கில் சம்பளம் வழங்கப்படும் நிலையில் மாதத்தின் கடைசி வாரத்தில் போராட்டம் செய்தால் மட்டுமே சம்பளத்தை வழங்குகின்றனர்.

போராட்டம் செய்யும் நாட்களுக்கு சம்பள பிடித்தம் செய்வது மேலும் சாக்கடைகளில் இறங்கி வேலை பார்க்கும் தங்களுக்கு கையுறை, காலுறை உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை

தங்களிடம் பிடித்தம் செய்யும் பிஎஃப் பணத்திற்கு ரசீது கொடுக்காமல் பணத்தை வழங்காமல் மிகுந்த மோசடி செய்து வருவதாக குற்றம் சாட்டி நேற்று நகராட்சி வாசலில் முற்றுகையிட்டு கீழே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது நகராட்சி ஆணையர் பாலாஜி பேச்சுவார்தை செய்தார். முன்தகவல் கொடுக்காமல் இதுபோன்ற செயலில் ஈடுபடவேண்டாம் என கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து ஊழியர்கள் போராட்டத்தை விட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News