உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம் நடைபெற்றதையும், சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீமகா வாராகி அம்மன் அருள் பாலித்ததையும் படத்தில் காணலாம்.

சேலம் தளவாய்ப்பட்டி ஸ்ரீ மகா வாராகி அம்மன் மகா கும்பாபிஷேக விழா

Published On 2022-12-14 07:49 GMT   |   Update On 2022-12-14 07:49 GMT
  • தளவாய்பட்டி கிராமம் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ஸ்ரீ மகா வாராகி அம்மன் புதிய ஆலயம் விநாயகர், பைரவர் பரிவாரத்துடன் அமைக்கப்பட்டு உள்ளது.
  • கும்பாபிேஷகம், 7.45 மணிக்கு விநாயகர், பைரவர் கும்பாபிஷேகம், காலை 8 மணிக்கு மூலவர் வாராஹி அம்மனுக்கு கும்பாபிேஷகம் கோலாகலமாக நடைபெற்றது.

சேலம்:

சேலம் தளவாய்பட்டி கிராமம் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ஸ்ரீ மகா வாராகி அம்மன் புதிய ஆலயம் விநாயகர், பைரவர் பரிவாரத்துடன் அமைக்கப்பட்டு உள்ளது.

இக் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா தீர்த்த பாலிகை அழைத்தல், கோபுர பதுமை கண் திறப்புடன் தொடங்கியது.

கடந்த 10-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு வாராகி அம்மனுக்கு 3-ம் கால பூஜை, யாகசாலை பூைஜகள், ஹோமம், தத்வார்வசனை பூைஜ, பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றன.

12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு அன்னை வாராஹிக்கு 4-ம் கால யாக பூஜையும், காலை 6.30 மணிக்கு யாகசாலை பூைஜகளும், 7 மணிக்கு பூர்ணாஹுதி, தீபாராதனை, கலசம் புறப்படுதல் நிகழ்ச்சிகளு நடந்தன. பின்பு 7.30 மணிக்கு கோபுர கும்பாபிேஷகம், 7.45 மணிக்கு விநாயகர், பைரவர் கும்பாபிஷேகம், காலை 8 மணிக்கு மூலவர் வாராஹி அம்மனுக்கு கும்பாபிேஷகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து பூஜை, தீபாராதனை, தசதானம், தரிசனம், மஹாபிஷேகம், மங்களார்த்தி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தொழில் அதிபர் பிரேம்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News