உள்ளூர் செய்திகள்

எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் திடீர் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

போலீஸ் நிலையத்தில் சேலம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் திடீர் ஆய்வு

Published On 2022-06-14 14:40 IST   |   Update On 2022-06-14 14:40:00 IST
சங்ககிரி போலீஸ் நிலையத்தில் சேலம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் திடீர் ஆய்வு செய்தார்.

சங்ககிரி:

சங்ககிரி போலீஸ் நிலையத்தில் சேலம் மாவட்ட எஸ்.பி., ஸ்ரீ அபிநவ் திடீர் ஆய்வு செய்தார். அப்போது போலீசாருக்கு முறையாக விடுப்புகள் கொடுக்கப்படுகிறதா என்றும், அவர்களுக்கு குறைகள் ஏதாவது உள்ளதா என்றும் கேட்டறிந்தார். மேலும் பணி மாறுதல் வேண்டும் என்று கேட்ட போலீசார்களுக்கு உடனடியாக மனு வாங்கி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

அதனையடுத்து அவர், வழக்குகளை கம்ப்யூட்டரில் முறையாக பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார். மக்களை காவல் நிலையத்திற்கு வெளியே நிற்க வைக்காமல் உடனடியாக அழைத்து அவர்களது குறைகளை தீர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும், கந்து வட்டி சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்களி டம் முறையாக புகார் வாங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அதனையடுத்து அவர் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள போலீசார் குடியி ருப்புகளை பார்வையிட்டு, போலீஸ் நிலையத்தை சுற்றிலும் சுத்தமாக வைத்துக்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத் தினார்.

ஆய்வின்போது சங்ககிரி டி.எஸ்.பி. ஆரோக்கியராஜ், சப்- இன்ஸ் பெக்டர் சுதாகரன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Tags:    

Similar News