உள்ளூர் செய்திகள்
காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர் பிணமாக மீட்பு
- குளித்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக நீரில் அடித்து செல்லப்பட்டார்
- உறவினர்கள் முயற்சி செய்தும் இவரை காப்பாற்ற முடியவில்லை.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருேக உள்ள புதுஏரி பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது33). இவர் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக கடந்த 9-ம் தேதி ஒகேனக்கல் சென்றுள்ளார்.
இந்நிலையில் முனுசாமி காவிரி ஆற்றங்கரையில் உள்ள அய்யப்பன் கோவில் அருகே குளித்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக நீரில் அடித்து செல்லப்பட்டார்.
இவருடைய உறவினர்கள் முயற்சி செய்தும் இவரை காப்பாற்ற முடியவில்லை. நீரில் அடித்து செல்லப்பட்ட முனுசாமி ஊட்டமலை பரிசல்துறை அருகே இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.
இது குறித்து ஓகேனக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.