உள்ளூர் செய்திகள்

கணக்கம்பட்டி அழுக்கு மூட்டை சித்தர் 

கணக்கம்பட்டி சித்தர் கோவிலுக்கு சிறப்பு பஸ் இயக்க கோரிக்கை

Published On 2022-06-22 04:53 GMT   |   Update On 2022-06-22 04:53 GMT
  • அரசு சிறப்பு பஸ்களை இயக்கினால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.
  • தினமும் நூற்றுக்கணக்கானோர் தரிசனம் செய்யச் சொல்கின்றனர் .

உடுமலை :

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகாவுக்கு உட்பட்ட கணக்கம்பட்டி கிராமத்தில் அழுக்கு மூட்டை சித்தர் சமாதி உள்ளது. இங்கு அவரது பக்தர்கள் ஆலயம் அமைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் அங்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் .இந்த ஆலயத்திற்கு உடுமலை பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நிர்வாகி குப்புசாமி திருப்பூர் மாவட்ட அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர்க்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கணக்கம்பட்டி மூட்டை சுவாமி ஜீவசமாதி அடைந்த இடத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் தரிசனம் செய்யச் சொல்கின்றனர் .போதிய பஸ் வசதி இல்லாததால் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர். தனியார் வாகனங்களை ஏற்பாடு செய்வதன் மூலம் கூடுதல் தொகையை செலவிட நேர்கிறது.

மேலும் செஞ்சேரி புத்தூர், குடிமங்கலம் ,தளி, மூங்கில்தொழுவு, முக்கோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் உடுமலை வந்து பஸ் மூலம் பழனிக்கு செல்கின்றனர் .பின்னர் அங்கிருந்து மற்றொரு பஸ் மூலம் செல்ல வேண்டியுள்ளது .அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பஸ் கிடைக்கும். இந்தக் கோயிலுக்குவிசேஷ நாட்களில் அரசு சிறப்பு பஸ்களை இயக்கினால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News