உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிப்புகளை அகற்றிய போது எடுத்த படம்.

பொத்தனூர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Published On 2022-07-24 07:49 GMT   |   Update On 2022-07-24 07:49 GMT
  • வேலூர் - ஜேடர்பாளையம் செல்லும் போத்தனூர் பகுதியில் உள்ள தார் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமங்களை அதிகாரிகள் அகற்றினார்கள்.
  • அதே போல் பல்வேறு வகையான சிமெண்ட் குழாய்கள் தயாரிக்கும் சிமெண்ட் பைப் கம்பெனியும் உள்ளது.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் -ஜேடர்பா ளையம் செல்லும் சாலையில் உள்ள பொத்தனூரில் தார் சாலையின் இருபுறமும் மளிகை கடைகள், பெட்டிக்கடைகள் ,பலகார கடைகள், துணிக்கடைகள், ஹார்டுவேர்ஸ் கடைகள், டீக்கடைகள், ஹோட்டல்கள், பழக்கடைகள், காய்கறி கடைகள், பிளாஸ்டிக் கடைகள் என ஏராளமான கடைகள் உள்ளன. அதே போல் பல்வேறு வகையான சிமெண்ட் குழாய்கள் தயாரிக்கும் சிமெண்ட் பைப் கம்பெனியும் உள்ளது.

இந்த சிமெண்ட் பைப் கம்பெனி நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும், பல்வேறு கடைக்காரர்களும் தார் சாலையின் இருபுறமும் ஓரத்தில் தங்களது விளம்பர போர்டுகளை வைத்துள்ளனர். அதேபோல் கடைக்காரர்கள் பலர் தார் சாலை வரை ஆக்கிரமித்து இருந்தனர். இது குறித்து அப்பகுதி சேர்ந்தவர்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் மற்றும் நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுத்திருந்தனர்.

அதன் அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பால கிருஷ்ணன் தலைமையில் சாலை ஆய்வாளர்கள் சங்கர், சிவகாமி மற்றும் சாலை பணியாளர்கள் கொண்ட குழுவினர் வேலூர் - ஜேடர்பாளையம் செல்லும் போத்தனூர் பகுதியில் உள்ள தார் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமங்களை அகற்றினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News