உலக குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு தினம்
- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
- போலீஸ் நிலையத்தின் செயல் முறை குறித்து எடுத்துரைத்தனர்
அரக்கோணம்:
அரக்கோணம் ரெயில்வே போலீஸ் நிலையம் சார்பில் உலக குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு தினத்தை முன் னிட்டு பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக் டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகள் சுமார் 70-க்கும் மேற்பட்டவர்கள் பேச்சு, கட்டுரை உள்ளிட்ட பல போட்டிகளில் கலந்து கொண்டனர்,,
சிறப்பு அழைப்பாளராக அரசினர் ஆதிதிராவிடர் பெண் கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மகாலட்சுமி கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட மாணவிகளை பாராட்டி பரிசுகளை வழங்கினார்.
தொடர்ந்து மாணவிகளை ரெயில்வே போலீஸ் நிலையத்திற்குள் அழைத்து சென்று போலீஸ் நிலையத்தின் செயல் முறை மற்றும் நடை முறைகள் குறித்து எடுத்துரைத்தனர்.