உள்ளூர் செய்திகள்

கழிவுநீர் கால்வாய் பணி விரைந்து முடிக்க கோரி வியாபாரிகள், பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2023-05-11 14:29 IST   |   Update On 2023-05-11 14:31:00 IST
  • போக்குவரத்து பாதிப்பு
  • போலீசார் பேச்சு வார்த்தை

காவேரிப்பாக்கம்:

பாணாவரம் பேரூராட்சியில் பாணாவரம் - காவேரிப்பாக்கம் செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி நடைபெற்ற வருகிறது. இதற்காக சாலையின் ஓரங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டது.

கழிவுநீர் தேக்கம்

ஆனால் கழிவுநீர் கால்வாய் கட்டும்பணிகளை விரைந்து முடிக்காமல் கால தாமதம் ஏற்படுவதால் பள் ளங்களில் கழிவுநீர் தேங்கு கிறது.

இதனால் அப்பகுதியில் துர் நாற்றம் வீசுகிறது. மேலும் டெங்கு, காலரா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பாணாவ ரம் ரெயில்வே மேம்பாலம் அருகே திடீர் சாலை மறிய லில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த பாணாவரம் போலீசார் சம் பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடு பட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News