உள்ளூர் செய்திகள்

பயணிகள் நிழற்குடை அமைக்க கோரிக்கை

Published On 2023-07-08 08:20 GMT   |   Update On 2023-07-08 08:20 GMT
  • நெடுஞ்சாலைப் பணிக்காக இடிக்கப்பட்டது
  • பொதுமக்கள் மற்றும் பயணிகள் சிரமம்

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையொட்டி காவேரிப்பாக்கம் பேரூராட்சி அமைந்துள்ளது.

இப்பகுதியில் இருந்து சென்னை, அரக்கோணம், ஸ்ரீபெரும்புத்தூர், ஓசூர், பெங்களூர், சித்தூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல காவேரிப்பாக்கம், அத்திப்பட்டு, திருப்பாற்கடல், ராமாபுரம், கடப்பேரி, கட்டளை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாணவ, மாணவிகள், முதியோர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த பஸ் நிலையத்திற்கு வருகின்றனர்.

இதன் காரணமாக காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் பகுதியில் மக்கள் கூட்டம் பரப்பரப்பாக காணப்படும். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் தேசிய நெடுஞ்சாலைப் பணிக்காக பயணியர் நிழற்குடை இடிக்கப்பட்டது. இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்ப டவில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த பகுதி முக்கிய வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் நிற்கும் சந்திப்பாக இருப்பதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடித்து நிழற்குடையை அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News