உள்ளூர் செய்திகள்

கமிஷனருக்கு ஆதரவாக நகராட்சி ஊழியர்கள் போராட்டம்

Published On 2022-07-13 15:30 IST   |   Update On 2022-07-13 15:30:00 IST
  • ராணிப்பேட்டை பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றிய விவகாரத்தில் முற்றுகை
  • சேர்மன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார்


ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சி சொந்தமான புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் கடைகள் உள்ளது.

இந்த கடைகளின் உரிமையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை மட்டும் பயன்ப டுத்திக் கொள்ளாமல் பொதுமக்கள் மற்றும் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் இடையூறு ஏற்படும் வகையில் முன்பக்கம் நடைபா தைகளை ஆக்கிரமித்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக அரக்கோணம் கமிஷனர் லதாவிற்கு புகார் தெரிவித்து வந்தனர்

இதையடுத்து கமிஷனர் லதா தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த இடங்களை அகற்றக் கோரி கடை உரிமையாளருக்கு அறிவுரை வழங்கினர்.

மேலும் சில வியாபாரிகளுக்கு இதற்கான அபராதமும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கவுன்சிலர்களுக்கு தகவல் கிடைக்க ஒரு சில அரக்கோணம் நகராட்சி கவுன்சிலர்கள் நேற்று கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து வாக்குவாதம் செய்துள்ளனர். இதனை அடுத்து கமிஷனர் லதாவை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் கமிஷனர் லதா அலுவலகத்தில் இருந்து கோபமாக வெளியேறி உள்ளார் இதனைத் கேள்விப்பட்ட நகராட்சி நகராட்சி அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் நகராட்சி நுழைவாயில் முன்பு அமர்ந்து கமிஷனர் லதாவுக்கு ஆதரவாகவும் கமிஷனரை தரக்குறைவாய் பேசிய கவுன்சிலரர்களுக்கு எதிராக கோஷமிட்டனர்

இதை கேள்விப்பட்ட நகராட்சி சேர்மன் லட்சுமி சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதான செய்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் நேற்று அரக்கோணம் நகராட்சி அலுவலகம் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News