உள்ளூர் செய்திகள்
காவேரிப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை
- வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது
- விவசாயிகள் மகிழ்ச்சி
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பனப்பாக்கம் காவேரிப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்த நிலையில் காலை 10:30 மணிக்கு மேல் லேசான சாரல் மழை பெய்து வருகிறது தமிழக வானிலை ஆராய்ச்சி மையம் ஏற்கனவே அறிவித்தபடி வரும் இரண்டு நாட்களில் 8 மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திடீரென பெய்து வரும் சாரல் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.