உள்ளூர் செய்திகள்

வியாபாரிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

போக்குவரத்துக்கு இடையூறாக வாரச்சந்தை அமைக்கக்கூடாது

Published On 2023-11-21 15:36 IST   |   Update On 2023-11-21 15:36:00 IST
  • வியாபாரிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை
  • மாற்று இடம் வழங்க வலியுறுத்தல்

காவேரிப்பாக்கம்;

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த கீழ்வீதி ஊராட்சியில் வாரந்தோறும் திங்கட்கிழமை சந்தை நடைபெற்று வருகிறது.

இந்த சந்தைக்கு பெரப்பேரி, கோடம்பாக்கம், உளியநல்லூர், மேலேரி, வெளிதாங்கிபுரம், கீழ்களத்தூர், செல்வமந்தை ஆகிய கிராமங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து காய்கறிகள் வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் சந்தையானது பாணாவரம் செல்லும் சாலை ஓரத்திலே இருப்பதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் விபத்தும் ஏற்படுகிறது.

இதனால் சந்தையை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என நெமிலி சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அப்போது கீழ்வீதி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி செல்வம் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் வியாபாரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு சந்தைக்கு மாற்று இடம் வழங்க வழிவகை செய்யப்படும் என்று வியாபாரிகளிடம் கூறினார்.

Tags:    

Similar News