உள்ளூர் செய்திகள்

கார்மேகம்

வரி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை

Published On 2022-09-21 06:39 GMT   |   Update On 2022-09-21 06:39 GMT
  • ராமநாதபுரம் நகராட்சியில் வரி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • இந்த தகவலை நகர்மன்ற தலைவர் அறிவித்துள்ளார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் கார்மேகம் கூறியதாவது:-

ராமநாதபுரம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர்வரி, தொழில்வரி, குத்தகை பாக்கி, வாடகை போன்றவற்றை 6 மாதத்திற்கு ஒரு முறை செலுத்த வேண்டும்.அவ்வாறு செலுத்தும் பணத்தில் இருந்து தான் பொதுமக்களுக்கு தேவையான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியும்.

ராமநாதபுரம் நகராட்சியில் வசிக்கும் வியாபாரிகள், பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி ரூ.10.90 கோடி, தொழில் வரி ரூ.63.31 லட்சம், குடிநீர் கட்டணம் ரூ.1.72 கோடி, பாதாள சாக்கடை கட்டணம் ரூ.2.93 கோடி, கடை வாடகை மற்றும் குத்தகை ரூ.1.71 கோடி என மொத்தம் ரூ. 17.90 கோடி வரி பாக்கியை செலுத்தவில்லை.

இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிக்கை அனுப்பப்ப ட்டுள்ளது. ராமநாதபுரம் நகராட்சிக்கு வரி நிலுவை அதிகமாக உள்ளதால் நகராட்சி பொது நிதியில் இருந்து செலவினம் மேற்கொண்டு மக்களுக்கு சேவை செய்ய முடியாத நிலை உள்ளது.

எனவே மேற்கண்ட வரி பாக்கிகளை வருகிற 30-ந் தேதிக்குள் நகராட்சிக்கு செலுத்தி பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வரி செலுத்தாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) லட்சுமணன் உடன் இருந்தார்.

Tags:    

Similar News