உள்ளூர் செய்திகள்

ரெயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்

Published On 2022-08-22 08:17 GMT   |   Update On 2022-08-22 08:17 GMT
  • ரெயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
  • மாவட்ட பொருளாளர் ரவீந்திரன் நன்றி கூறினார்.

ராமநாதபுரம்

மநாதபுரத்தில் மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ஜேசு ராஜ் தலைமையில் நடந்தது. செயலாளர் ராம கிருஷ்ணன் வரவேற்றார். துணைத்தலைவர் அன்சாரி முன்னிலை வகித்தார்.

மாவட்ட சமூக நல கண்காணிப்பாளர் முத்துலட்சுமி, மத்திய -மாநில அரசுகள் மூத்த குடிமக்களுக்காக செயல்படுத்தும் திட்டங்கள், பராமரிப்பு சட்டங்கள் மற்றும் ஹெல்ப் லைன் எண் 14567 பயன்பாடு குறித்து விளக்கினார்.

இதில் ஓமியோபதி மற்றும் மனநல மருத்துவர் டாக்டர் வித்யா பிரியதர்ஷினி, ஹெல்ப்பேஜ் இந்தியா மேலாளர் முத்துக்கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரசு பஸ்களில் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும், மாத உதவித்தொகையை ரூ.2000 ஆக உயர்த்த வேண்டும். 2 சிலிண்டர் இணைப்புள்ளவர்களுக்கு மானியத்தொகை ரத்து என்ற தமிழக அரசின் முடிவை கைவிட வேண்டும்.

கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்ட ெரயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்.நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமேசுவரத்திற்கு இயக்கப்படும் அனைத்து ெரயில்களும் ராமநாதபுரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆன்மீக சுற்றுலா தலமான இப்பகுதியில் சுற்றுலாசார் தொழில்களை மேம்படுத்த வசதியாக உச்சிப்புளியில் சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய அரசை கேட்டுக் கொள்வது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

முடிவில் மாவட்ட பொருளாளர் ரவீந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News