உள்ளூர் செய்திகள்

என்.எஸ்.எஸ். முகாம்

Published On 2022-11-08 07:30 GMT   |   Update On 2022-11-08 07:30 GMT
  • பரமக்குடி அருகே உள்ள நகரகுடி கிராமத்தில் கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் என்.எஸ்.எஸ். முகாம் நடந்தது.
  • மரக்கன்று நடுதல், கபசுரகுடிநீர் வழங்குதல், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.

பரமக்குடி

பரமக்குடி அருகே உள்ள நகரகுடி கிராமத்தில் கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளியின் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் நடந்தது. தாளாளர் ஷாஜகான் தலைமை தாங்கினார். கீழமுஸ்லிம் ஜமாத் சபை தலைவர் சாகுல்ஹமீது, செயலாளர் சாதிக்அலி, பொருளாளர் லியாக்கத்அலி கான் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் அஜ்மல்கான் வரவேற்றார். ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் ரவி, மாவட்ட தொடர்பு அலுவலர் ஜெயகாந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

7 நாட்கள் நடந்த முகாமில் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களை சுத்தம் செய்தல், சாலைகளை தூய்மைப்படுத்துதல், டெங்கு விழிப்புணர்வு பேரணி, நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு, யோகாசன பயிற்சி, மரக்கன்று நடுதல், கபசுரகுடிநீர் வழங்குதல், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. முகாமிற்கான ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் இந்திரஜித் தலைமையில் ஆசிரியர் குழுவினர் செய்தனர். உதவித்தலைமை ஆசிரியர் புரோஸ்கான் நன்றி கூறினார்.

Tags:    

Similar News