உள்ளூர் செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி

Published On 2022-09-09 07:16 GMT   |   Update On 2022-09-09 07:16 GMT
  • அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடந்தது.
  • இந்தியாவில் தயாரித்த சாதாரண சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி நடக்கிறது. இதையொட்டி மாவட்டத்திற்கு ரூ.1 லட்சம் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

ராமநாதபுரத்தில் வருகிற 15-ந்தேதி நடக்கும் சைக்கிள் போட்டியில் 13 வயது பிரிவு மாணவர்கள் 15 கி.மீ. தூரம் செல்கின்றனர். மாணவிகள் 10 கி.மீ. தூரம் செல்கின்றனர். 15 வயது முதல் 17 வயதிற்குட்பட்ட வர்களுக்கான பிரிவு மாணவர்கள் 20 கி.மீ. தூரமும், மாணவிகள் 15 கி.மீ. தூரமும் செல்கின்றனர்.

ராமநாதபுரம் பட்டணம்காத்தான் இ.சி.ஆர். 4 வழிச்சாலை பிரிவில் தொடங்கி, மதுரை ரோடு, பாப்பாக்குடி பஸ் ஸ்டாப், நயினார்கோவில் வளைவிற்கு சென்று, மீண்டும் இ.சி.ஆர்., சாலைக்கு திரும்பி வர உள்ளனர்.

இந்தியாவில் தயாரித்த சாதாரண சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-வது பரிசு ரூ.3ஆயிரம், 3-வது பரிசு ரூ.2 ஆயிரம், 4 முதல் 10-வது இடம் வரை வருபவர்களுக்கு தலா ரூ.250 பரிசு வழங்கப்படும்.

இதில் விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளியின் தலைமையாசிரியரிடம் வயது சான்று, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகலுடன் வருகிற 15-ந்தேதி காலை 6 மணிக்கு போட்டி தொடங்கும் இடத்திற்கு வர வேண்டும் என்று மாவட்ட விளையாட்டு, இளைஞர் நல அலுவலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News