உள்ளூர் செய்திகள்

மணிப்பூர் பழங்குடியினர் மீதான தாக்குதல்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்

Published On 2023-07-24 09:30 GMT   |   Update On 2023-07-24 09:30 GMT
  • மணிப்பூர் பழங்குடியினர் மீதான தாக்குதலை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம் தெரிவித்தனர்.
  • மனிதம் மரித்துப்போக செய்த இந்த கொடூர சம்பவத்தை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.

தொண்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா–அத் பொதுச்செயலா–ளர் அப்துல்கரீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி–ருப்பதாவது:-

மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக கலவரம் நடந்து வருகிறது. பல உயிர்கள் பறிக்கப்பட்டு, மக்கள் தங்களுடைய வாழ்விடங்களை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே இந்தியர்க–ளுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் மணிப் பூர் மாநிலத்தில் மெய்தி சமூகத்தைச் சேர்ந்த வன்மு–றைக் கும்பல், குக்கி பழங்கு–டியினத்தை சேர்ந்த மூன்று பெண்களை நிர்வாணப்ப–டுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூர–மான வீடியோ சமூக வலைத் தளங்களில் தற் போது பரவி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்க்கும் போது காட்டு–மிராண்டிகள் வாழும் தேசத்தில் நாம் வாழ்கிறோமா என்று வெட்கப்படக்கூடிய அளவிற்கு அந்தப் பெண்க–ளைச் சித்திரவதை செய்து நிர்வாணமாக அழைத்துச் செல்கின்றனர். கலவரங்கள் மூலம் அச்சத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வாக்குகளைப் பெறும் பாசிச அரசியலை முன்னெடுப்பவர்களுக்கு இது பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்க வாய்ப் பில்லை.

மனிதம் மரித்துப்போகச் செய்த இந்தக் கொடூர சம்பவத்தை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்துள்ளனர். சமூக ஆர்வலர்கள், மகளிர் அமைப்புகள் என அனைத் துத் தரப்பு மக்களும் இதற்குத் தங்களது கண்ட–னங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இந்தச் சம்பவத்தைப் போன்று எத்தனை சம்பவம் நடந்தது என்றே தெரியவில்லை. அனைத்தையும் மூடி மறைக்கும் வேலையை ஒன்றிய அரசு செய்து வருகிறது.

உலக அரங்கில் இந்தியர்க–ளைத் தலை குனிய செய்த–வர்களை கடுமையான முறையில் தண்டிக்க வேண் டும். இனியும் தாமதிக்கா–மல் மணிப்பூர் கலவரம் முடி–வுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் குஜராத் மாநி–லத்தைச் சார்ந்த பல்கீஸ் பானுவிற்கு எதிரான குற்ற செயலில் ஈடுபட்டவர்க–ளுக்கு வழங்கப்பட்ட தண்டனை போன்று இல்லாமல் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News