உள்ளூர் செய்திகள்

ராதா கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது.

கோதண்டராமசாமி கோவிலில் ராதா கல்யாணம்

Published On 2023-02-27 13:58 IST   |   Update On 2023-02-27 13:58:00 IST
  • பெண்கள் பால், பழம் கொடுத்து ஆரத்தி எடுத்து சம்பிரதாய திவ்யநாமம் நடைபெற்றது.
  • சாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதியில் கோதண்டராமர் சாமி கோவிலில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் 8 ஆம் ஆண்டு ஸ்ரீ ராதா கல்யாண நிகழ்வு நடைபெற்றது.

காலை தென்பாதி விநாயகர் கோவிலில் இருந்து திருமணத்திற்கான சீர்வரிசை பொருட்களை மங்கல வாத்தியங்கள் முழங்க பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலை வந்தடைந்தனர்.

தொடர்ந்து ராதா, கிருஷ்ணன் சுவாமிகள் ஊஞ்சலில் எழுந்தருள பெண்கள் பால், பழம் கொடுத்து ஆரத்தி எடுத்து சம்பிரதாய திவ்யநாமம் நடைபெற்றது.

அதன் பின்னர் நடைபெற்ற ஆஞ்சநேயர் உற்சவத்தில் திரளான ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றுகூடி கோலாட்டம் மற்றும் நடனத்துடன் ராதா கல்யாண விழா களை கட்டியது.

அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான ராதா கல்யாண உற்சவம் மங்கள வாத்தியங்கள், வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது.

பின்னர் சுவாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை கட்டப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாலை நடராஜ.சட்டையப்பன் குழுவினரின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags:    

Similar News