உள்ளூர் செய்திகள்

வெறிநாய் தடுப்பூசி முகாம் - நாளை நடக்கிறது

Published On 2023-01-24 07:59 GMT   |   Update On 2023-01-24 07:59 GMT
  • செல்ல பிராணிகள் வளர்ப்போரும், பொதுமக்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
  • கால்நடைகளை வாகனங்களில் ஏற்றி செல்லும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும் விளக்கம் அளிக்க உள்ளனர்.

குண்டடம் :

குண்டடம் வட்டாரம் பேட்டை , காளி பாளையம் அரசு கால்நடை மருத்துவமனை மருத்துவர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:- திருப்பூர் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் மற்றும் ராஷ்ட்ரிய கிருமி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நாளை (புதன்கிழமை) குண்டடம் சமுதாய நலக் கூடம் அருகே காலை 9 மணி முதல் வெறிநாய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் குழு கலந்து கொண்டு வெறிநாய் தடுப்பூசி போடுதல் மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது.

இறைச்சிக்கூடங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், கால்நடைகளை வாகனங்களில் ஏற்றி செல்லும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும் விளக்கம் அளிக்க உள்ளனர். எனவே செல்ல பிராணிகள் வளர்ப்போரும், பொதுமக்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News