உள்ளூர் செய்திகள்

வெறிநோய் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு

Published On 2023-02-14 09:25 GMT   |   Update On 2023-02-14 09:25 GMT
  • இலவச வெறிநோய் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • மருத்துவ ர்கள் கிருபாகரன் மற்றும் சரவணன் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

பென்னாகரம்,

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் மூலம் இலவச வெறிநோய் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கால்நடை உதவி மருத்துவர் கிருபாகரன் தலைமை வகித்தார்.கால்நடை உதவி மருத்துவர் சரவணன் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பென்னாகரம் பேரூராட்சி துணைத் தலைவர் வள்ளியம்மாள் பவுன்ராஜ் கலந்து கொண்டு பேசினார்.

தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் வெறி நோய் பரவும் முறை, வெறிநோய் பாதிக்கப்பட்ட நாய்களை அடையாளம் காண்பது எப்படி, அதனை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் மற்றும் இலவச வெறி நோய் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு கால்நடை உதவி மருத்துவ ர்கள் கிருபாகரன் மற்றும் சரவணன் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் தாமஸ் கலந்து கொண்டார்.

Tags:    

Similar News