உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவிலில் புதிய தமிழகம் கட்சி தேர்தல் முகவர்கள் ஆலோசனை கூட்டம்

Published On 2023-07-05 08:34 GMT   |   Update On 2023-07-05 08:34 GMT
  • அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் புதிய தமிழகம் கட்சியின் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
  • ஆடி தபசு திருவிழாவுக்கு முன்பு சாலைகளை விரைந்து சரி செய்ய வேண்டும்.

சங்கரன்கோவில்:

தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதிய தமிழகம் தேர்தல் முகவர்கள் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட செயலாளர் ராசையா தலைமை தாங்கினார். மாவட்ட இணைச்செயலாளர் செல்வராஜ் வரவேற்று பேசினார். மாவட்ட துணை செயலாளர் தங்கப்பாண்டி முன்னிலை வகித்தார்.

கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொது செயலாளர் அய்யர், மாநில துணை அமைப்பு செயலாளர் சட்டமன்ற தொகுதி மேலிட பொறுப்பாளர் சுந்தரராஜ், மாநில துணை கொள்கை பரப்பு செயலாளர் இரும்பொறை சேதுராமன், விருதுநகர் மாவட்ட இணைச் செயலாளர் குணம், குருவிகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமையா, குருவிகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர்கள் சுகுமார், சங்கரலிங்கம், சுந்தர்ராஜ் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் புதிய தமிழகம் கட்சியின் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தரும் விதத்தில் அலுவலகம் முழுநேரம் செயல்படும் என நிர்வாகிகள் பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும்.

சங்கரன்கோவில் நகராட்சி பகுதிகளில் தோண்டி போடப்பட்டுள்ள சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதை ஆடி தபசு திருவிழாவுக்கு முன்பு விரைந்து சரி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள், புளியங்குடி நகர செயலாளர் சாமிதுரை, சங்கரன்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் கந்தவேல், மேற்கு ஒன்றிய செயலாளர் மாடசாமி, வாசுதேவநல்லூர் பேரூர் செயலாளர் உமர்கத்தா, நிர்வாகிகள் மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News