உள்ளூர் செய்திகள்

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை விரைவில் நடத்த வேண்டும்

Published On 2023-08-08 09:54 GMT   |   Update On 2023-08-08 09:54 GMT
  • பணிகள் தொடங்கி ஓரு ஆண்டு கடந்து இன்னும் முழுமையாக முடியவில்லை.
  • கட்டுமானம் என்ற பெயரில் எந்திரத்தை ஒரு மூலையில் போட்டு விட்டார்கள்.

தஞ்சாவூர்:

தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள் , முதன்மைச் செயலாளர் புலவர் ஆதி நெடுஞ்செ ழியன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறி க்கையில் கூறியிரு ப்பதாவது:-

தஞ்சை அருகே உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர்.

இந்தக் கோயில் கடந்த 2004 ஆம் ஆண்டு கும்பாபி ஷேகம் நடத்தப்பட்டது.

18 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கட்டமாக மூலவர் கோபுரம் ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களை பாலாலயம் செய்வதற்கான பாலாலய பூஜைகள் தொடங்கின.

தொடர்ந்து கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகின்றன.

இருந்தாலும் பணிகள் தொடங்கி ஓர் ஆண்டு கடந்து இன்னும் பணிகள் முழுமையாக முடியவில்லை.

குறிப்பாக ஆடி ஆவணி மாதங்களில் மாரியம்மன் கோவிலில் பல்வேறு விழாக்கள் நடத்தப்படும்.

தற்போது கும்பாபி ஷேகத்திற்காக பாலாலயம் செய்யப்பட்டதால் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வில்லை.

மேலும் இந்திய உணவு கழகம் சார்பில் தேங்காய் தண்ணீரை சுத்திகரித்து அதனை பக்தர்களுக்கு பிரசாதமாக அளிப்பதற்கு இயந்திரத்தை வழங்கியது.

அந்த இயந்திரம் ஆனது முதன்முதலாக புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலில் தான் அமைக்கப்பட்டது என இந்தியா முழுவதும் பரப்புரை செய்யப்பட்டது.

ஆனால் கட்டுமானம் என்ற பெயரில் இயந்திரத்தை ஒரு மூலையில் போட்டு விட்டார்கள்.

எனவே விரைவில் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும். இயந்திரத்தை தொடர்ந்து இயங்க வழிவகை செய்ய வேண்டும். இதுகுறித்து தமிழக முதலமைச்சர், இந்து சமய அறநிலைத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News