உள்ளூர் செய்திகள்
திருமயம் ஊராட்சி கிராம சபா கூட்டம்
- திருமயம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது
- ஏராளமான கிராமத்தினர் கலந்து கொண்டு குறைகளை எடுத்து கூறினர்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி கிராம சபா கூட்டம் சீமானூர் ஸ்ரீ ராகவேந்திரா நகரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு தலைவர் சரவணன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வீரமணி, ரத்தினம், வீராசாமி, பாண்டியம்மாள், ஊராட்சி செயலாளர் குமார், கிராம நிர்வாக அலுவலர் மீனாள், சுகாதார ஆய்வாளர் ரங்கசாமி, வனசரக அலுவலர், தோட்டக்கலை உதவி இயக்குனர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம், சுப்பிரமணியன், கால்நடை மருத்துவர் மோகனப்பிரியா, பொதுமக்கள், சுய உதவி குழுக்கள், நீர்நிலை பாசன தலைவர்கள் பிரபாகரன், செல்லப்பன், வாசகர் வட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம், சமூக ஆர்வலர் சைமன், மகாத்மா காந்தி தேசிய ஊரக பணித்தள பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.