உள்ளூர் செய்திகள்

இலக்கிய மன்ற கூட்டம்

Published On 2023-09-11 11:45 IST   |   Update On 2023-09-11 11:45:00 IST
  • ஆலங்குடியில் இலக்கிய மன்ற கூட்டம் நடைபெற்றது
  • தமிழ் மொழியின் பழமை பெருமை குறித்தும் இலக்கியம் சார்ந்த சொற்பொழிவுகள் நடைபெற்றது

 ஆலங்குடி 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இலக்கிய மன்ற கூட்டம் நடைபெற்றது. இலக்கிய மன்ற தலைவர் முத்து தலைமை வகித்தார். செயலாளர் பாபுஜான், பொருளாளர் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் தமிழ் மொழியின் பழமை பெருமை குறித்தும் இலக்கியம் சார்ந்த சொற்பொழிவுகளையும் பாபுஜான், கவிஞர் ரமா.ராமநாதன் ஆகியோர் பேசினர். திருமுருகன் பாடல்கள் பாடினார். கூட்டத்தில் ஓய்வு பெற்ற உதவி தொடக்க கல்வி அலுவலர் கருப்பையா, ஓய்வு பெற்ற வட்டாட்சியர் ராஜசேகரன், ஆசிரியர் வின்சென்ட், மணிராஜ், கிருஷ்ணன், முருகேசன், செல்லத்துரை, சுப்பிரமணியன், சசிகுமார், நெடுஞ்செழியன், குமார், ஆறுமுகம், ரமேஷ், விஜயபாரதி, வாசன், திருச்செல்வம், ஜெயராஜ், மற்றும் இலக்கியமன்ற ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News